தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்;பத்திரண்டாம் அதிகாரம்.
வினையுடம்பு
|
8. |
வினையுடம்பின் நீக்கம் வினைநீக்கத் தாகா அனக தயவினைக்கொண் டாம். |
418 |
குறள் விளக்கம்.
தயாநியதி ஆகிய செயலாம் வினையினால், மேலும் மேலும் சூழ்கின்ற இவ்வினையுடம்பு ஒழிக்கப் படுவதற்கு யாது செய்ய வேண்டும் ? எனில், அகத்திலிருந்து, சுத்த தயா செயல் அனகத்தே புரியப்படுவதால்தான். இவ்வினையுடம்பு பற்று முற்று மற்று வாராது ஒழியும் என்க.
அப்படி அல்லாது, எக்கர்மம் (செயல்) புரிந்தாலும், செயலறச் சோம்பி இருத்தலாகிய அகர்மத்தாலும், பலனில் அவா இல்லாமல் செய்யப்படும் நிட்காமிய கர்மத்தாலும் வினையுடம்பு நீங்குவதில்லை.
அனக தயவினால் புற வினையுடம்பே கனக தயாஒளி உடம்பாய் மாறி நிலைத்து விளங்கும்.
Write a comment