தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்;பத்திரண்டாம் அதிகாரம்.
வினையுடம்பு
.
|
6. |
நல்வினையும் தீவினையும் ஞாலத் துடலீனும் அல்வினை போக்கும் அருள். |
416 |
குறள் விளக்கம்.
நல்ல கர்மத்தாலும், தீய கர்மத்தாலும் அல்லது அறத்தாலும் பாவத்தாலும், ஆன்மாவுக்கு சுக துக்கப் பிறப்பு உண்டாகின்றது. இவ்வினை காரணமாய்த்தான் உலகில் ஆன்மாவுக்கு தேகம் உண்டாகின்றது என்று அறிவோம். இவ்வினையுடம்பு ஏற்று உலக வாழ்வில் இருந்தே அருள் அனுபவம் பெற வேண்டியுள்ளது.
இவ்வருள் அனுபவம் பெற்று ஆனந்த வாழ்வு வாழாது, நல்வினை தீவினை இரண்டையுமே ஒழித்து, அதனால் வினையறுத்து, வினை உடம்பை துறந்து, வினைப்பிறவியே எட்டாது உள் ஒடுங்கிப் போவது, அருளை இழந்து இருளில் மறையும் மூடச் செயலாம்.
Write a comment