தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்;பத்திரண்டாம் அதிகாரம்.
வினையுடம்பு
.
|
5. |
ஊழ்வினையுஞ் சூழ்வினையு முன்னி யுழலாது .வாழ்வினை யன்பான் மலர்த்து. |
415 |
குறள் விளக்கம்.
சென்ற பிறப்பின் பழ வினைப் பயனும், வருகின்ற மேலைப் பிறப்பின் காரணமாகிய சஞ்சித கர்மத்தின் விளைவும் கருத்தில் கொள்ளாது, இப்பொழுது வாழ்கின்ற வாழ்வினை சுத்த தயவினால் சூழுதல் வேண்டும். இப்படி அன்பு மயமானால் வாழ்வு பேரின்பமாகும். அப்போது, பழமையான ஊழும் பாழாகும். வரவிருக்கும் சஞ்சிதமும் எஞ்சாதாம்.
சென்றது நினையார், வருவது கருதார், கண்முன்
நின்றது கொண்டு கருணை வாழ்வு வாழ்வாரே
சன்மார்க்கராவர்.
Write a comment