Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.412.

தயவுக்குறள்



சுவாமி சரவணானந்தா.



நாற்பத்திரண்டாம் அதிகாரம்.

வினையுடம்பு

2.

அவனன்றி யோரணுவு மாகா ததனால்

.இவனார் வினையே திவண்.

412

குறள் விளக்கம்.



‘அவனன்றி அணுவும் அசையாது என்பது பழமொழி. ‘அவனின்றி ஓர் அணுவும் ஆகாது’ என்பது, இன்றைய மொழி. பரமான்மா இல்லையேல், சீவான்ம சிற்றணுவும், ஐம்பூத சூக்கும அணுவும் தோன்றவே முடியாது.

தயாபெருங்கடவுள் ஒருவரே பல்வேறு ஆன்மாக்களாகத் தோன்றி கொண்டுள்ளார். சடமாயுள்ள பூத அணுக்களுக்கும் உள்ளீடாய்ப் பொருந்தி நின்று இயக்குகின்றதும் இப்பரமன் சிற்றணுச் சக்தியேயாம். ஆதலின், அவன் இல்லாமல் எந்த அணுவும் உருவாகா. உயிரும், உலகும், செயலும் மற்ற எதும் தோன்றற்கு இல்லையாம்.

எனவே, இப்பிறப்பு கொண்டு விளங்கும் மனிதன் யார் ? இவன் செயலாம் வினை தான் யாது ? யாவும் தயாபரன் தோற்றமே எனத் தெளிதல் வேண்டும்.

ஏற்றுகின்றதாம்.