Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.411

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்;பத்திரண்டாம் அதிகாரம்.

வினையுடம்பு

1.

பரந்தயவே ஆன்மா பதிநிலைக் கேறத்

தருந்தேக மெல்வினையோ சாற்று.

411

குறள் விளக்கம்.

ஆன்மாவுக்கு ஒவ்வொரு தேகமும் வந்து அடைவதற்குக் காரணம் யாது, அது, அவ்வான்மா முற்பிறப்பில் செய்த வினையால் வருவது என்ப. உண்மையில், அவ்வான்மாவுக்கு உள் இருக்கும் பரமான்மாவின் தயவுச் செயலால் வருகின்ற உடம்பேயாகும்.

ஆகையால், இங்கு வினை என்பது கடவுள் தயவுச் செயல் என உயர் பொருளில் கொள்ள வேண்டும். இதனால்தான், மனித சீவான்மா என்ற அதிகாரத்தின்பின் இவ்வினையுடம்பு ஓதப்பட்டுள்ளது.

அபக்குவ வசத்தால், கடவுள் தயவுச் செயலால் பெற்றுள்ள இத்தேகத்தை, வினை உடம்பாக மதித்துக் கொண்டு, மேலும் மேலும், அகங்காரம் ஒழியாது, நன்மை தீமைகளைப் புரிந்து புரிந்து, இன்ப துன்பப் பிறவிகளை வளர்த்து வருகிறான் மனிதன்.

பக்குவமுற்றால், பரனை அடையவும். அவன் தயவால், இவ்வினை உடம்பே சுத்த தயா உடம்பாய் மாறித் தோன்றி மன்னி (நிலைத்து) விளங்கவும் முடியும்.