தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தோராம் அதிகாரம்
மனித சீவான்மா.
|
4. |
வாசி முடிசிவமாம் வான்வடிவை மேவுமெனப் பேசின மெய்மை பிடி. |
404. |
குறள் விளக்கம்.
வாசி வாசி……..(விடாது பன்முறை சொல்லின்) சிவா சிவா என விளங்கும். இது சொல் அமைப்பால் காண்பது. வாசி ஆகிய உயிர், புறக்காற்றால் மட்டும் உண்டாவது அல்ல. ஆன்ம ஆகாசத்தில் எழும் சீவ சக்தியின் இயக்கத்தால் வெளிப்படுவதாம்.
ஆகாயத்தில் வாயுசக்தி பிரிவறக் கலந்து நின்று உரு உலகத் தோற்றக் காரணமாகின்றது போல பரமான்ம பரமாகாயத்தில் பிரிவற உள்ள அருட் சக்தியால் சீவ சக்தியும், அறிவு உணர்வு தரு தேகமும் தோன்றி உள்ளன. இதனால், சீவ நிலையின் முடிவில் பரமாகாசப் பதி வடிவம் திகழ்வதாம். இம்முடிநிலை எய்த சீவ உணர்வில் அருள் விளக்கம் பூரணமாய் வெளிப்பட வேண்டும்.
இப்படி, வாசியாம் உயிரனுபவத்தில் அருளொடு தழைத்தால், முடிவில், வாசி நிலைக்கு அதீதத்தில் பரமாகாசப் பதி வடிவாம் சிவானுபவம் சித்திப்பதாகக் கூறப்படுகின்றது.