Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.403

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தோராம் அதிகாரம்

மனித சீவான்மா.



3.

சீவ வுயிர்ப்புடலிற் சீவான்ம சக்தியாய்

.ஓவற் றருளா லுணர்.

403

குறள் விளக்கம்.

சீவ உயிர்ப்பாகிய பிராணக் காற்று இத்தேகத்திலிரவு பகலாக இடைவிடாது இயங்கிக் கொண்டே உள்ளது. இவ்வியக்கத்திற்கு காரணமாய் இருப்பது, எது ? என்று ஆழ்ந்து உணர்ந்து அறியும்போது, பரமான்மாவில் இருந்து வெளிப்பட்டு உள்ள சீவ ஆன்ம சக்தியே என்று விளங்கும்.

இவ்வுண்மையை திருவருளால் கண்டு கொண்டு சுத்த ஆன்மாவில் நிலைத்து வாழ்வதால் அருள் வாழ்வு பெறலாகும்.