தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தோராம் அதிகாரம்
மனித சீவான்மா.
|
2. |
மனவறிவோ டுற்று வளரான்மா நெஞ்சிற் றினமுழலும் வீணிற் செகத்து. |
402. |
குறள் விளக்கம்.
மன அறிவுடன் கூடிய சீவான்ம சக்தி இதயத் தானத்திலே உள்ளது. இம்மன அறிவு வளர்ந்து பக்குவம் அடைய இவ்விதயமே உற்ற இடமாய் இருக்கின்றதாம்.
இந்நெஞ்சில் அவா முதலிய மாசு படிவதால், உயிர்க் காற்றோடு கூடிய இரத்தச் சுழற்சியும் பாதிக்கப்பட்டு வேகம் கொள்ளும். இதனால், ஜீவான்ம சக்தி வீணில் விரையம் ஆகின்றது. பற்பல பிணிகளுக்கும் காரணம் ஆகின்றது.
சத்விசாரத்தால் மனம் சுத்தமாகி இதயத் தானத்தில் இருந்து அவ்வறிவுணர்வு மேல் எழுந்து, தயவு மயமாகி பரமான்மாவில் பொருந்தல் வேண்டும். இந்நிலை அடையாத வரை, சீவான்மா இதயப் பிரதேசத்திலேயே உழன்று கொண்டே இருக்கும்.
Write a comment