Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.396.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பதாம் அதிகாரம்.
பரமான்மா.

6.
கட்புல னாகாக் கடவுள் அணுவடிவம்
.விட்டொளிரும் சீவான்மா மே.
396.

குறள் விளக்கம்.
கடவுட் சக்தி நிரம்பிய பரமான்ம உண்மை வடிவம், கண்ணுக்குப் புலனாகாது. அப்பரமான்ம சக்தியின் சிறு கூறு, சீவான்மாக்களி வெளிப்பட்டு, சீவ தேகாதி பிரபஞ்சத்தை இயக்கும்போது தான் ஓரளவு அக்கடவுட் சக்தி அறியப்படுகின்றதாம்.
பக்குவ மனிதன், மெய்யறிவினாலே, சீவான்மத் தகழியில் ஏற்றப்பட்டு சுடருகின்ற, பரமான்ம சோதியைக் காண்பான்.