தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பதாம் அதிகாரம்.
பரமான்மா.
|
5.`
|
பாவகத்தா லெய்தப் படுமோ பரமான்மா
மேவகத்தே நின்றருளான் வேண்டு.
|
395.
|
குறள் விளக்கம்.
இத்தேகம் நான் அல்ல, இதற்குள் இருக்கும் தேகி ஆகிய பிரம்மம் நான் என்று பிறர் மூலம் கேட்ட விடய ஞானத்தாலும், கற்றறிந்த கலை ஞானத்தாலும், எல்லாம், அப்பிரம்ம பாவனை செய்து வந்தால் அதனை அடைந்து விட முடியுமோ ? முடியாது.
அக உண்மையை சத்விசாரத்தால் கண்டு பொருந்தி, இடைவிடாது அருள் உணர்வு பெருக பெருக வேண்டிக் கொண்டிருந்தால், அவ்வருள் வெளிப்பட்டு கடமாகிய தேக நிலைப் பற்றற்று கடவுள் அனுபவம் சித்திக்கும், இதுவே சுத்த சன்மார்க்கம் வழங்கும் பரமான்ம சித்தியாம்.
Write a comment