Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.394.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பதாம் அதிகாரம்.
பரமான்மா.

4.
தற்போதம் கெட்டுத் தயாசோதி கொண்டவர்
.மற்றுருவம் பற்றுவரோ மன்.
394.

குறள் விளக்கம்.
பரமான்மாவின் உண்மையை அறிந்து, நான் என்று எழும் ஆன்ம தற்போதத்தைத் தயாசோதியில் கரைத்து விட்டவர்கள் எங்கும் அந்த தயவு ஒளியையே கண்டு கொள்ளுகிறார்கள்.
ஆதலின், அவர்கள், அவ்வொளியிலே மன்னி நின்று பெருவாழ்வு வாழ்வார்களே அன்றி, புற உருவத் தோற்றங்களிலே பற்று வைத்து, புலன் இச்சையில் கூடிக் களித்து மயங்கி உழலார்கள்.