Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.390.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தொன்பதாம் அதிகாரம்.
ஆன்மா

10
அழியாத ஆன்ம அணுவின் அகநின்
றொழியாதே யாளு முலகு.
390

குறள் விளக்கம்.
பூத பெளதிக அணுக்கள் அழியும், அண்ட பிண்டங்கள் அழியும். ஆனால் சிற்றணுவாகிய ஆன்மா அழிவதில்லை. ஏனெனில், அழிவற்ற நித்திய பரபொருளாகிய கடவுள், ஆன்ம அணுவக வடிவமே தன் உண்மை அருட்பெரும் வடிவாகக் கொண்டு நிலைத்துள்ளார்.
இச்சிற்றணுச் சிற்றம்பலமே உறையுளாகக் கொண்டு நின்று உலகெல்லாம் தோற்றுவித்து ஆள்கின்றார் நம்பதி. இவ்வருள் அம்பல ஆட்சிக்கு என்றும் அழிவு இல்லையாம்.
ஆன்மா அழியாது இருப்பினும் அதுவே கடவுள் அல்ல. ‘அயம் ஆத்மா பிரம்மம்’ ஆகாது. அவ் ஆன்மாவில் என்றும் நிலைத்து நின்றாளும் அருட்பெருஞ்ஜோதியே கடவுளாம்.