Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தி்னம் ஒரு தயவுக்குறள்-எண்,386.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தொன்பதாம் அதிகாரம்.
ஆன்மா

6.
பரனுண்மை தாங்குயிர் பார்மேற் பலவாம்
வருபிறப் பேற்கும் வளர்ந்து.
386.

குறள் விளக்கம்.
ஆன்மாவுக்கு உள்ளே கடவுள் உண்மை பொதிந்து நின்று சதா வளர்ந்து கொண்டே உள்ளது. இவ்வளர்ச்சி நிறைவுறும் பொருட்டே அவ்வான்மாவின் மீது, ஒன்றன் பின் ஒன்றாகப் பற்பல பிறவித் தேகங்கள் வந்து சூழ்ந்து வாழ்வளித்துச் சென்று கொண்டே உள்ளன.
அக உண்மை நிறைவுறும் வரை, மாயாப் பிறவித் தேகம் தோன்றித் தோன்றி பந்தகம் செய்து கொண்டேதான் இருக்கும்.