Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.385.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தொன்பதாம் அதிகாரம்.
ஆன்மா

5,
எறும்பு முதலா எறும்பி கடையா
உறுமுருக் குள்ளான்மா ஒன்று
385.

குறள் விளக்கம்.
ஆன்ம அணுவில் வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால் அவை, அபக்குவம், பக்குவாபக்குவம், பக்குவம் என்னும் நிலை அடைந்து பதி உண்மை கண்டு, பேரின்பம் அடைவதற்காகவே உலகில் எறும்பு முதல் எறும்பி (யானை) ஈறாக உள்ள பல்வேறு சீவ வடிவங்களைத் தாங்கி வாழ்ந்து வருகின்றன.
இவ் வாழ்வால் ஒவ்வொரு ஆன்மாவும் புலன் உணர்வும், பகுத்தறிவும் மன அறிவும், முடிவில் அருள் அனுபவமும் உண்டாகி ஆனந்த நிலை அடையும்.