தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தொன்பதாம் அதிகாரம்.
ஆன்மா
|
.2
|
ஒன்றாம் பரனே யுலவாத் தயாசித்தால்
நின்றாடும் ஆன்மாக்கண் ணேர்ந்து.
|
382
|
குறள் விளக்கம்.
இத்தனை என்று எண்ணி அறியக் கூடாத பல கோடி ஆன்மாக்களிலும், ஒன்றான ஏக பரம்பொருளே, எக்காலும் இருந்து கொண்டு, அருள் ஐந்தொழிலாம் பெரு நடனம் புரிகின்றதாம். இது நமது தயா ஜோதி வள்ளலின், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டுள்ள திரு நடன தத்துவமாம்.
யார் தனது ஆன்மாவில் சுடர் விட்டிலங்குகின்ற பதியை தயவோடு கண்டு கொள்ளுகின்றானோ, அவன் தன் பதியே எல்லா ஆன்மாக்களிலும் இருந்து நடம் புரிவதாகவும் அறிந்து கொள்ளுகின்றான்.
Write a comment