தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தெட்டாம் அதிகாரம்.
சீவ தயவு.
|
.9
|
நல்லொழுக்கம் சீவதயா ஞானதெறி மற்றெல்லாம்
புல்லொழுக்கம் பொய்யெனப் போம்.
|
379
|
குறள் விளக்கம்.
சன்மார்க்கம் என்னும் ஞானநெறி ஒன்றே நல்லொழுக்கம் எனப்படும். இவ்வொழுக்கம் அகத்திலிருந்து தயவால் உலகெல்லாம் தழுவும்.
மற்ற நெறிகள் யாவும், புறத்தினின்று சில சில ஒழுக்க விதிகளைக் கொண்டு விளங்குவனவாம். இவைகள் எல்லாம், தேக, இந்திரிய, கரண நிலை வரைதான் ஓரளவு பொருந்தும். மேல் நிலைக்காது பொய்த்துப்போம்.
ஆதலின் இவை புல்லொழுக்க நெறியாம். அன்றியும், புல்லுதல் எனின், தழுவுதல் என்ற பொருள் படலால், மனிதர்களால், மன உணர்வால் பற்று வைத்து தழுவப்பட்டுள்ள குறுகிய கொள்கைக் சிறுநெறி ஒழுக்கத்தைப் புல்லொழுக்க மார்க்கமாகவும் விளக்கலாம்.
Write a comment