Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.378.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தெட்டாம் அதிகாரம்.
சீவ தயவு.

.8
மன்னுயி ரின்புற வாழ்வித்துந் தான்தயா
இன்னுரு வெய்தார்க் கிழிவு.
378

குறள் விளக்கம்.
பிற சீவர்கள் மகிழும்படி உடல் விளக்கமும், உயிர் விளக்கமும் தரும் சீவகாருண்யப் பணி புரிதல் நன்று, அத்தோடு சத்விசாரத்தால் தயா மயமாகித் தன்னுருவும் அதுவாகப் பெற்று வாழ்வதுவே உயர்ந்த குறிக்கோளாகும்.
அப்படி அல்லாது, புலன் அவா அறாது ஈகை மாத்திரத்தால் உண்மை இன்ப நிலை எய்திட முடியாது. இது தாழ்ந்ச்த நிலையாம். இத்தாழ்வறு சீவ தயவே சுத்த சன்மார்க்கத் திருநெறியாம்.