தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தெட்டாம் அதிகாரம்.
சீவ தயவு.
|
.7
|
உடற்பற் றொழித்து வுயிர்பற்றி யாண்டுஞ்
சுடர்தயை யின்புறச் சூழு.
|
377
|
குறள் விளக்கம்.
பொது நோக்கோடு சீவர்களைப் பார்த்து, அவைகள் தயா விளக்கம் உறும் வண்ணம் இன்பச் செயல் புரிதல் வேண்டும். ஆகையால், எந்நிலையிலும், எவ்விடத்தும் உயிர்கள் உயர்வான தயா இன்பம் பெறற்கான செயலே புரிதல் வேண்டும்.
மாறுபாட்டைத் தரும் வேறுபாடுடைய தேகாதி தோற்றத்தைக் கண்டு பற்றுவதால், பொது நோக்கம் கெட்டு சுத்த தயவுச் செயலுக்கு இடையூறு உண்டாகும் என்பதை நன்கு அறிந்து தெளிதல் வேண்டும். சுத்த சத்விசாரத்தால் அகநிலை பொருந்தி நின்று சூழ்நர் உள்ளத்தில் இன்பச் சுடர் ஏற்றுதல் தகும்.
Write a comment