Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.374.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தெட்டாம் அதிகாரம்.
சீவ தயவு.

.4
பற்றற வுண்ணின்று பாருறு சீவர்கட்
குற்றபடி யீத லுயர்வு.
374

குறள் விளக்கம்.
சீவ தயவோடு, புறப்பற்று இன்றி, அகம் ஒன்றி நின்று கருணைப் பணி புரிதல் வேண்டும். அப்படிச் செய்யும்போது, சூழ வரும் சீவர்களின் விளக்கத்திற்க்காக, திருவருளால் நமக்குக் கிடைத்த பொருளை, வகையோடு வழங்கி, வளம் பெறச் செய்தல், முறையாகும்.
இந்தத் தயவுச் செயலுக்கு திருவருளே உள் இருந்து இயக்குவதால் தடையும் வாராது. தாழ்வும் சேராது, நன்மையே பெருகும். உயர்வே உண்டாகும்.