தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தெட்டாம் அதிகாரம்.
சீவ தயவு.
|
2
|
தயைபெருக நன்மை தழைக்குமிவ் வாழ்வில்
அயலடையில் அல்லல் அடும்.
|
372
|
குறள் விளக்கம்.
இவ்வுலக வாழ்விலே நன்மை எல்லாம் பெர்று மகிழ்ந்திருக்க வேண்டுமாயின், உள்ளத்திலும், புற உலகத்திலும் கருணை உணர்வும் செயலும் தழைத்து ஓங்குதல் வேண்டும். இந்த சீவ தயா ஒழுக்கம் ஒன்றே நன்மைகளுக்கெல்லாம் வித்தாகும்.
இந்நெறி அல்லாத, சுத்த தயவில்லாத மார்க்கங்களால் உலக வாழ்வில் துன்பமே சூழந்து வருத்தும். ஆதலின், இத் தயாபெரு நெறியே எங்கும் தழைப்பதாக.
Write a comment