Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.371.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தெட்டாம் அதிகாரம்.
சீவ தயவு.
1
சீவர்கட் குள்ளாய்ச் சிதைவில் ;பதியிருந்(து)
ஈவதித் தாயா மியல்.
371
குறள் விளக்கம்.
தயா பெருஞ் சக்தியே தாய்ச் சக்தியாக அகத்திருந்து, சீவர்களுக்கு வேண்டுவன எல்லாம் முறையாக வழங்கி வாழ்வித்து, மேல் நிலைக்கு ஏற்றிக் கொண்டே உள்ளதாம். கொலையற்ற உலகியல் வாழ்வுக்கு, அகத்திருந்து வளர்கின்ற சீவதயவே ஆதாரமாய் இருப்பதால், இவ்வதிகாரம் கொல்லாமைக்குப் பின் வைக்கப்பட்டுள்ளது.
தயா இயல் பதி சக்தியின் இடத்திருந்தே நேரடியாய் விரிவதாம். அன்றியும், இதுவே எல்லாவற்றிற்கும் தாய் இயலாக, அன்னை சக்தியாக உள்ளதாம். சீவர்களின் அகத்தே, ஆன்மாவின் கண்ணின்றே, இத்தாயியல் சதா பரப்பப்பட்டுக் கொண்டே உள்ளது.
சிதைவற்ற ஆன்மாவில் இருந்து இவ்வியல் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பதால், இதனை சூழப் பலவேறு பிறப்புத் தேகங்கள் ஒவ்வொன்றாக வந்து வந்து, சிறிது சிறிது, உள்ளொளியை வளர்த்துச் செல்கின்றன.