Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.366.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்.
கொல்லாமை.

6.
கொல்லாமை முற்றுங் குலவிவாழ் வீண்டுற
நல்லம் பலத்தை நணுகு.
366

குறள் விளக்கம்.
கொல்லாமையைப் பூரணமாக மேற்கொண்டு, அழியாது வாழ்வதற்குத்தான் இத்தயா சன்மார்க்கம் தோன்றி உள்ளது. மற்றெந்த சீவகாருண்யம் உடைய மார்க்கங்களாலும் முற்றிலும் ஒழிக்கப்பட முடியாத கொல்லாமையை இந்நெறி ஒன்றினால் ஆகக் கூடியதாய் அறிந்து கொள்ளலாகும்.
தயா பெருஞ்ஜோதியாய் என்றும் நின்றிலங்கும் நமது பதியை சிற்றம்பலத்தின்கண் கண்டடைய வேண்டியுள்ளோம். இவ்வம்பலத்தை நண்ணி பதிபதம் பற்றிக் கொண்டால் நல்வாழ்வு பெறலாம். இவ்வம்பல வாழ்நரே கொலை முற்றும் தவிர்த்தவர். இவரே அகத்தில் பொருந்தி நின்று தயவை விரிவுபடுத்தி, அனக வடிவொடு உலகில் வாழ்வர். இவரே, கொலையும் இறப்பும் கடந்து, பூரணமான கொல்லாமையோடு இவ்வுலகில் வாழ்பவராவர்.
hariharan_82
Non Killing of animals and others is very strict to the Suddha
Sanmargis...
This article insists that...wonderful article.
Wednesday, December 23, 2009 at 23:53 pm by hariharan_82