தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்
|
3
|
அருள்நெறி தானேயிங் காருயிர் காக்கும்
இருள்நெறிக் கென்றும் இடர்.
|
363
|
குறள் விளக்கம்.
தயவுடைய மார்க்கமே கொலை தவிர்த்துச் சீவர்களைக் காப்பது, கொல்லாமையே அருளுடமை. கொல்லா நெறியே, அருள் நெறி.
மற்றும் சீவ தயவில்லாத மார்க்கம் ஒளியற்ற இருண்ட துன்பங்களும் தடைகளும் நிறைந்த வழியாகும். இவ்விருள் நெறியால் கொலையும் அழிவும் மிகும்.
உலகில், அமைதியும், சமாதானமும் இன்பமும் நிலை நாட்ட வேண்டுவோர் யாவரும் தயை நிரம்பிய அருள் நெறியே ஏற்று வாழ்தல் வேண்டும்.
Write a comment