தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்
புலால் மறுத்தல்.
|
9.
|
புலைக்கா கொலைகள் புரிகின்றீர் நாளும்
விலக்கீ ரருள்மே விடற்கு.
|
359
|
குறள் விளக்கம்.
புலை உணவுக்காகவே தினமும் எண்ணிலாச் சீவர்கள் வதைக்கப்படுகின்றன. அவ்வுணவு வேண்டியதில்லையாயின் அவ்வுயிர்க் கொலையும் நிகழாது.
புலாலின் பொருட்டு அந்த சீவர்களை ஓம்பி வளர்த்துப் பெருக்காவிடில் அவைகளும் எண்ணிக்கையில் அளவுக்கு மேல் மிகவும் அதிகரித்து விடா. திருவருள் நாம் விரும்புவதையே வழங்கும். கடவுள் தயை பூரணமாய்ப் பெறுவதற்காக, புலையுணவை நீக்கி, புலை உடம்பின் பற்றற்று வாழ வேண்டும்.
Write a comment