தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்
புலால் மறுத்தல்.
|
8.
|
விடமயக் கீயும் விடக்(கு)ஊண் விடுக
தொடலு மீசனருட் போய்ந்து.
|
358
|
குறள் விளக்கம்.
மனம், வாக்கு, காயத்தால் எட்ட முடியாத திருவருள் நிலையை சுத்த தயா உணர்வால் ஒன்றிடலாகும். அங்ஙனம் ஒன்றி நின்று புலை உணவைத் தவிர்த்தல் வேண்டும்.
புலால் உணவால் உண்டாகும் நஞ்சின் மயக்கம் நோய் தந்து, மெய்யறிவை மறைத்து, உயிரையும் உண்டுவிடும். அருள் நிலையுறாது புலால் மறுப்பதால் மட்டும் பெரும் பயன் அடைந்து விட முடியாது. அருளமுதே இத்தேகத்திற்கும் ஆகாரமாகி, மனிதனைத் தன் மயமாக்கி விளங்கச் செய்வதாம்.
விடக்கு = இறைச்சி.
Write a comment