Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.357.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்
புலால் மறுத்தல்.

7.
நசியவாழ் வெய்தலாம் நானிலத் தன்பாற்
பிசிதா சனம்விட்ட பின்.
357

குறள் விளக்கம்.
பிசிதம் + அசன = பிசிதாசனம் = இறைச்சி உணவு.
புலால் உணவை விட்டுவிட்டு, அகத்திருந்து அன்பை வளர்த்தால் மனிதன் புனிதனாகி இவ்வுலக வாழ்வில் அழிவற்ற இன்ப நிலை அடையலாம்.
மாமிச உணவு விடாத வரை உண்மையான அன்பு உண்டாகாது. அதனால் கடவுள் அருளும் கிட்டாது. அருளுறாதபோது, நசியா, (சிசைவுறா, அழியா) இன்ப வாழ்வும் பெற முடியாது. ஆதலால், முதலில் புலையுணவை விடுங்கள். பின்பு, அன்பும், அருளும் இன்பமும் பெறலாகும்.