தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தைந்தாம் அதிகாரம்.
வேற்றுமை
|
8.
|
பழநெறிப் பற்று பயனிலாக் கொள்கை
கிழமையைப் போக்குங் கெடுத்து.
|
348.
|
குறள் விளக்கம்.
நம் பதிபாலிருந்து வெளிப்படுகின்ற இச்சுத்த தயாநெறி எக்காலும் விளங்குவது என்றும் புதுமையானது, இந்நெறியால் எல்லா உயிர்களின் இடத்தும் நட்பு வளரும், எவ்வுயிர்க்கும் நலம் அளிக்கும்.
புற விடயங்களில் மூடமாக மேற்கொள்ளும் கொள்கைகள், பழைய மார்க்கங்களில், உண்மை அறியாது வைத்துள்ள பற்றினால் உண்டாவதாம். இது யாவரிடத்தும் காட்ட வேண்டிய பொது உரிமையாகிய நட்பை நசித்தொழிக்கும். மூடப்பற்றால் வேற்றுமை எண்ணம் உண்டாகில் அது சீவர்களின் ஒற்றுமை வாழ்வைக் கலைத்து, ஆன்ம நேய சகோதரத்துவத்திற்கு பங்கம் உண்டாக்கும்.
ஆதலின், பழ நெறியைப் பற்றற விட்டு, அருள் நெறி பற்றி அக உரிமை வளர்த்தல் வேண்டும்.
கிழமை = நட்புறவு, உரிமை.
நன்றி.