தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தைந்தாம் அதிகாரம்.
வேற்றுமை
|
7.
|
தடைசெய்யும் வேற்றுமை சாயத் தயவுப்
படைகொண்டு தாக்கிப் பயில்.
|
347.
|
குறள் விளக்கம்.
சன்மார்க்கத்தில் ஒழுகுவோர்க்கு வேற்றுமை உணர்ச்சியே மேற்செல்லத் தடையாய் இருக்கின்றது. ஆகையால் அத்தடையை அழித்து ஒழிப்பதற்கு சீவ தயவே ஆயுதமாகக் கொண்டு தாக்கி வெற்றி கொள்ள வேண்டும். பன்முறை இவ்வாயுதம் கொண்டு தாக்கும் பயிற்சியால் தடை முற்றும் நீங்கி சுத்த தயா மயமாய் விளங்கலாகும்.
வேற்றுமையால் தயவு தடைபட்டு, மனிதப்படை அழியும்.
தயவுப்படையால் வேற்றுமை அழிந்து மனித குலம் வாழும்.
வெளிநாட்டினர் வந்து சத்திய ஞான சபை தரிசனத்திற்கு வந்தாலே அவர்களை நிம்மதியாக விடுவதில்லை அங்கே உள்ள மக்கள்.
என்று வள்ளலார் சொன்ன நிலை வடலூரில் நிலவுமோ...அவர்தான் அதற்கு விரைவில் வழி வகுக்க வேண்டும்.