Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.342.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தைந்தாம் அதிகாரம்.
வேற்றுமை

2.
சாதிமதக் கொள்கையான் சாற்றிடு வேற்றுமை
ஓதுமுயிர் மெய்காண்பார்க் கூறு
342.

குறள் விளக்கம்.
உயிர்த் தத்துவத்தின் உண்மை கண்டு, அருள் அனுபவ நிலை அடைவார்க்கு சாதி மதக் கொள்கையால் கூறப்படும் வேற்றுமை உணர்ச்சி கூடாது. இவை சுத்த நெறிக்குத் தடையாம்.
சமய சாத்திரங்களை எல்லாம் ஓதியும் உணர்தற்கரிய உயிருண்மையை உள்ளவாறு கண்டு கொண்டால் கற்பனைச் சாதி மதக் கொள்கைகளின் கட்டு ஒழியும், வேற்றுமை உணர்ச்சி அழியும், அகிலமாம் சகோதரத்துவம் விளங்கும்.
ஊறு = தடை, கேடு.