Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.341.
தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தைந்தாம் அதிகாரம்.
வேற்றுமை

1.
அன்பறி வின்பம் அடைவுயிர்க் காண்பெண்ணாம்
முன்பறி வேற்றுமை முட்டு.
341.

குறள் விளக்கம்.
முந்நிலை ஆன்மாக்கள் ஒரு தன்மையானது எனக் கண்டு ஒத்து வாழ முன்னதிகாரம் கூறப்பட்டது. இவ்வொருமை உணர்வு மறதியாலும் பழக்க வசத்தாலும் அடிக்கடி மறைந்து போக, உலகை நோக்கும்போது வேற்றுமை உணர்ச்சியே தழைக்கும். அவ்வேற்றுமையைக் களைந்து ஒற்றுமையைக் காணவே இவ்வதிகாரம் தொடர்கின்றதாம்.
எல்லோரும் பக்குவ நிலையுற்று சச்சிதானந்த மயம் ஆதல் ஒன்றே முடிவாகும். இதனால் சீவர்களில் ஆண், பெண், உயர்வு, தாழ்வு என்ற பேத உணர்ச்சி சன்மார்க்கத்திற்குத் தடையாம். அறியாமையும், அபக்குவமும் இருந்த காலத்தில் அந்த வேற்றுமை உணர்ச்சி இருந்திருக்கலாம். பக்தி ஒழுக்கத்தால் அமைதியாய் உலகியல் நடந்தது. அக்காலத்தில், இப்பொழுது சன்மார்க்க நெறியால் சச்சிதானந்த லட்சியத்தோடு யாவரும் ஒத்து வாழ வேண்டி இருக்கின்றது.
முட்டு = தடை).