தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து நான்காம் அதிகாரம்.
முந்நிலை.
|
2.
|
உருவேறு கொண்ட வுணர்மனம் வேறு
கருவே றுயிரொன்று காண்.
|
332.
|
குறள் விளக்கம்.
‘கருவேறு உயிர் ஒன்று காண்’ = அகத்தே உட்கருவாய் இருந்து, அறிவு வளர்ச்சி அடைகின்ற ஆன்மா, இது ஒரு தன்மைத்தானது. இதனைச் சூழ உயிர்ச்சக்தியும், உணர்வும். உருவமும் வேறு வேறு விதமாய், அனந்த வண்ணமாய் உலகில் தோன்றி மறைகின்றன. ஒன்றாம் உயிரனுபவம் கண்டு கொண்டு, மேல் மூடிய முக்கவசங்களினால் மயங்காது தயை வளர்த்தல் வேண்டும்.
Write a comment