Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.330.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து மூன்றாம் அதிகாரம்.
திணை.

10.
அகநிலை யோர்ந்து அருளொடு ஒன்றுஞ்
சுகநிலை நற்றிணைச் சுட்டு.
330.

குறள் விளக்கம்.
ஐந்திணைக் கருத்தை அகம் கொண்டிலங்கும் நற்றிணை மனிதனுக்கு சுகநிலையாகிய பேரின்ப சித்தியை விளக்கவந்தது. ஆதலின், சத்விசாரத்தால் அகவுண்மையைக் கண்டு தெளிந்து அருள் ஒழுக்க வாழ்வு சேர்தல் வேண்டும்.
சுகநிலை என்பது “துகளில் சாயுச்சிய கதியை யீறற்ற சொல்
சுக சொரூபத்தை யுற்றடையேனோ” என்ற திருப்புகழ் வாசகத்தால் கடவுளோடு ஐக்கியப் படுகின்ற சாயுச்சிய நிலையே சுக வடிவம், கிளி வடிவம் ஆகிய சுக நிலை.
இச்சுக வடிவம் ஈறு அற்ற சொல் எனப்படுகின்றது. அதாவது உலகெல்லாம் நிறைந்து முடிவின்றி இசைத்துக் கொண்டிருக்கின்றது “ஓம்” என்னும் பிரணவமேயாம். ஆதலின் இப்பிரணவ தேகமே சுக வடிவமாம். நல்ல திணையாகி அருள் ஒழுக்கத்தால் சுட்டப்படுவது இச்சுக தேக நிலையேயாம்.