தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து மூன்றாம் அதிகாரம்.
திணை.
|
.3.
|
பகுத்தறிந் தேற்ற பயன்தெரி மாந்தர்
வகுத்தா ரருட்டிணை மாண்பு.
|
323.
|
குறள் விளக்கம்.
மனோ சக்தி கொண்டு பகுத்தறிந்து திருவருள் பயனை அடைவதற்கு, அவ்வருள் ஒழுக்க நெறியை வகுத்துக் காட்டியுள்ளனர் ஆன்றோர்.
கடவுள் உண்மையை அறிவால் அறிவது மட்டும் பெரும் பயன் அளித்து விடாது, அறிந்த உண்மையை அகத்தில் இருத்திக் கொண்டு, அருள் ஒழுக்க வாழ்வு நடத்தலே அருட்டிணை வகுத்தவர்களின் திருவுள்ளமாம். இதனால்தான் சிறந்த பயனுண்டாம்.
Write a comment