Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.321.

தயவுக்குறள்
சுவாமிசரவணானந்தா.
முப்பத்து மூன்றாம் அதிகாரம்.
திணை.

.1.
திணையென்ப நல்ல திருவொழுக்க மாமால்
இணையுநம் மாந்தர்க்கா மிங்கு.
321

குறள் விளக்கம்.
மனிதனுக்கு நல்ல அறிவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வறிவு கொண்டு தயா ஒழுக்கத்தோடு வாழக் கடமைப்பட்டுள்ளான். இவ்வுயர் ஒழுக்கமே திணை என்பர். இவ்வொழுக்கம் மனித குலத்திற்கே சிறப்பானதாம். ஆதலின், மனிதனைப் பற்றிக் கூறிய அதிகாரத்திற்கு அடுத்த இத்திணை என்னும் அதிகாரம் அமைக்கப்பட்டுள்ளதாம்.
“இணையும் மாந்தர்” அதாவது, தயா ஒழுக்கத்தோடு கூடி வாழும் மக்களைக் குறிப்பது. தெய்வீகமான தயா ஒழுக்கமே உண்மைத் திணையாக அறிய வேண்டும்.
எல்லா மனிதர்களுமே உலகில் கூடி வாழ்கின்றார்கள். எனினும், பக்குவ மனிதர்களிடமே இவ்வொழுக்கம் வெளிப்படும். ஆதலின், மாந்தர்க்கே இவ்வொழுக்கம் உரியதெனும் போது, பக்குவ மாந்தர்க்கே என்பது தெளிவாம்.