Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.320.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம்அத்தியாயம்.
தன்னை மதியாமை.

0.
நாளொரு கோடி நரமலர் பூத்துதிர்
320.
தாளுடை மக்கள் தரு.

குறள் விளக்கம்.
உலகிலே மன்பதையாகிய மரத்தில் தினமும் கோடிக்கணக்கான மனிதர்களாகிய உயிர் மலர்கள் தோன்றுவதும் உதிர்ந்து ஒழிவதுமாக உள்ளன.
தாள் என்பது மரத்தின் அடி ஆகும். இம் மன்பதை மரத்திற்கு ஆதார அடிநிலையாய் உள்ளது கடவுள் திருவடியேயாகும். அதாவது ஆன்மாவின் அகத்துள்ள அத்திருவடியினின்று, மனித சீவ தேகாதி பிரபஞ்சம் யாவும் தோன்றுவதும் ஒடுங்குவதுமாய் உள்ளதாம். இதனால், மனிதன் இறந்து விட்டால் அவன் திருவடி நிழலை அடைந்ததாக, பரமபதம் எய்தியதாகக் கூறுவது நம்மனோர் மரபு.