Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.319.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம்அத்தியாயம்.
தன்னை மதியாமை.
9.
இற்செறி காத லியனெறி வாழநல்
319.
அற்புறும் மாந்தர் அகத்து.
குறள் விளக்கம்.
மனிதர்களுடைய உள்ளத்தில் கடவுள் ஒளியாகிய அன்பு நிலைத்து ஒளிர வேண்டும். இதற்கு இயற்கைக்குத் தக உள்ள எளிய மார்க்கம், அன்பு வளரும் இல்லற வாழ்வாம். இதில் ஒழுக்கம் தவறாது வாழ்ந்தால் அவ்வக ஒளி பெறலாம்.
மற்றத் துறவு நெறியோ எனின், சற்று கடினமானது. இதிலும் புலனின்பப் பற்றற்று அகமாகிய இல்லத்தில் இருந்து தயா நெறி வழுவாது வாழ்ந்துவரின், கடவுட் சோதி அன்பொளி வீசி நிலவும்.
அற்புறும் = அன்பு அடையும்.