Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.312.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.

2.
அறிவேற ஏறும் அடைபிறப் பீது
312
நிறைவேறி வந்த நிலை.

குறள் விளக்கம்.
உயிரினிடத்து அறிவு உணர்வு எந்த அளவுக்கு விளைந்துள்ளதோ அதற்குத் தகவே புறத் தேகங்கள் அமைகின்றன.
அதாவது, உயிர்க்கு ஓரறிவு உடைய நிலையில், புல் பூண்டு முதலிய தாவர வடிவங்கள் வந்து சேரும். ஈரறிவு நிலை சேர சங்கு, சிப்பி, முதலிய வடிவங்கள் சூழும்….இது போன்றே ஆறறிவு நிலை எய்திய போது அடைவதுதான் இம்மனித தேகம்.
ஒவ்வொரு அறிவு நிலை நிறைவேறியதும், மேல்நிலைப் பிறப்பு உண்டாகி வந்து, இப்பகுத்தறிவு விளங்கும் மனித வடிவம் கிடைக்கப் பெற்றுள்ளோம், இன்று.