Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.310.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.

10.
ஏங்கா திளையா திறையோ டுறுவார்க்கே
310.
ஆங்காரம் போக்கும் அருள்.

குறள் விளக்கம்.
கடவுள் ஒளியோடு ஒன்றித் தான் என்ற உணர்வற அகங்காரம் ஒழிந்து, உலகில் எதற்கும் ஏங்காது, சோர்வுறாது பணி புரிபவர்க்கு திருவருளே முன் நின்று காக்கும்.
“எனையான் மதித்துப் புகல்கிறேன் அன்றுஇஃ தெந்தைபிரான்
தனையான் மதித்துப் பெற்றநல் வாழ்வது சாற்றுகின்றேன்
வினையான் மெலிந்த மெலிவையெல்லாம் விரைந்தே தவிர்த்துத்
தனையான் புணர்ந்திடச் சாகாவரத்தையும் தந்தனனே”.
என்ற திருவருட்பாவால், தன்னை மதியாது, தலைவனையே மதித்து, அவனருளால் அழியா இன்பில் வாழ்வோமாக.