Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.309.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.

9.
அகங்கரித் திங்கு அருள்தரச் சூழும்
309.
இகமறுத் தேங்க விகழ்.

குறள் விளக்கம்.
இக வாழ்வில் வருவது ஒவ்வொன்றும் நமது தயாவள்ளல் நமக்கு தயா உண்மை விளக்கவே வழங்குகின்ற இயல்பறிந்து மறுக்காது ஏற்றுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்படிச் செய்யாது அருளாணையை மறந்து அகங்கரித்து மறுப்பதும், அதனால் உலக வாழ்வில் பயனாஇயாது ஏங்கி அழிவதும் இகழத்தக்கனவாம்.
ஆதலின், தன்னை மதியாது, தம் அகமுடையான் ஆணையை மதித்து உலகியலை திறம்பட நடத்தினால் புகழ் வாழ்வு உண்டாம்.