Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.307.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.

7.
அறம்பொரு ளின்பம் அவைமூன்று மேற்க
307.
திறந்தரு மம்பலஞ் சேர்ந்து.

குறள் விளக்கம்.
நமக்கு அருட் பேரார்றலைத் தருகின்ற திருவம்பலத்தை மதித்து அடைந்து, மன்னி நின்று, உலகில் அறம் பொருளின்பம் ஆகிய மூன்றையும் புரிதல் வேண்டும்.
அக நிலையுறாது செய்யும் அம்மூன்றும், மனோகரண புலன் வசப்பட்டு குறைவுற்றுக் கெடும்.
இவ்வுண்மை தெரிவிக்கவே திருவள்ளுவர் இவ்வக நிலையிலிருந்தே முப்பாலை ஓதியுள்ளார்.
“வீடொன்று பாயிரம் நான்கு…..” (திருவள்ளுவ மாலை) என்ற குறிப்பால் அறியலாகும். திருக்குறள் முதல் அதிகாரத்தில் கடவுள் வாழ்த்தாகக் கூறப்பட்டுள்ளதே அக வீட்டை ஒன்றும் விளக்கம். பாயிரம் நான்கில், வீடு ஒன்று, அதாவது பாயிரமாக உள்ள நான்கு அதிகாரங்களில் ஒன்றாவது அதிகாரமே வீடாகும்.
நமது திருவம்பலத்தே சுடருகின்ற அருட்பெரும் திருவடியே, அந்நிராதார நிலையிலிருந்தும் மற்ற கீழ் ஆறு ஆதார நிலைகளில் இருந்தும் ஏழ் அடி அல்லது தாள் ஆக அனுபவப்பட உள்ள உண்மையைக் குறிக்கவே, இவ்வதிகாரத்தின் ஏழு குறள்களில் மேற்படி அடி அல்லது தாள் காட்டப்பட்டுள்ளன.
ஆகவே, இவ்வீட்டின் உண்மை அறிந்து அதினின்றே அறம் பொருள் இன்பம் வழங்கப்பட்டுள்ளனவாகக் கொள்ளுவர் சன்மார்க்கர். முன்னோர் கூற்றும். திருவள்ளுவனார் முப்பாலில் நாற்பால் மொழிந்தார் என்பதே.
இன்று நம் சன்மார்க்கத்தால், அக வீட்டில் தங்கி, தயா ஒழுக்கம், தயா விசாரம், தயா இன்ப வாழ்வு என்னும் அறம், பொருள், இன்பம் காண்பதே நம் ;பதி ஆணையாம்.