தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.
|
2.
|
மதிக்க தயவோடு மன்னருள் தன்னை
துதிக்க தயவே சொரிந்து
|
302.
|
குறள் விளக்கம்.
கடவுள் அருளே நித்தியமாக நிலைத்துள்ளது. அங்ஙனம் நிலைத்து நின்று ஆன்மாக்களுக்கு நித்தியானந்தம் வழங்கவே அருள் ஐந்தொழில் புரிகின்றது. நன்மை செய்வார் இன்பம் பெறுவதும், தீமை செய்வார் துன்பமுறுவதும் அவ்வருளின் ஆணையாம்.
ஆதலின். நாம் நல்லின்பம் அடைவதே லட்சியமாய்க் கொண்டு அருள் ஒன்றினையே மதித்துத் தயா நலம் பெருகும் செயல்கள் புரிந்து கொண்டிருத்தல் வேண்டும். இச் செய்கையே அருட் பெரும் பதியை உண்மையில் துதி செய்தலாகும்.
Write a comment