தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
முப்பதாம் அதிகாரம்.
மனோன்மணி.
|
9. |
உண்டுறங்கி வீண்போகா துண்மனத் தொன்றதயை கொண்டொளிரக் கண்ணிடை கூடு. |
299. |
குறள் விளக்கம்.
சுத்த மனத்தே நின்று தயவுச் சுடர் பரப்ப வேண்டுவதால், தயையை (தயவு செய்தலை) மறவாது இருகட் புருவத்திடை இருந்து பழகுதல் வேண்டும்.
உலக வாழ்வில் இப்பழக்கம் உண்டாவதற்கு, ஊணும், உறக்கமும் அளவாக அளித்தல் வேண்டும். அப்படியில்லாமல், உண்ணாது பட்டினி போட்டு வறுத்தலும், பேருண்டியால் களித்து மயங்கிக் கிடத்தலும் வீணாகும்.
மனோன்மணி வீட்டிலிருந்து தயா முயற்சி செய்வதற்கான சக்தியை அளவான உண்டியாலும், துயிலாலும் பெற்று வாழல் வேண்டும்.
Write a comment