Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.292.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பதாம் அதிகாரம்.
மனோன்மணி.

2.
பூத்தமலர் நாப்பண் பொலிந்தமனக் கண்ணாலே
பார்த்திடலாம் தெய்வப் படைப்பு.
292.

குறள் விளக்கம்.
மனத்தை இடைவிடாது புருவ மத்தியில் இருக்கச் செய்யும் பழக்கத்திற்காக இவ்வதிகாரத்து ஒவ்வொரு குறளும் அந்தாதி முறையில் தொடர்கின்றதாம்.
ஒருமைப் பட்ட மனம், புருவ நடுவில் மலர்ந்த வெண்டாமரை போல் விளங்க, அம்மலர் நடுவே ஓர் ஒளி தோன்றி விரிகின்றது. இதுவே மனத்தின் கண்ணாகும். இந்தக் கண்ணைக் கொண்டு தயவோடு உலகை நோக்கினால், பிரபஞ்ச சிருஷ்டி இரகசியம் எல்லாம் வெள்ளிடை மலை என விளங்கும்.
சுத்த தயவில்லாத அசுத்த மனமுடையார்க்கு இம் மனக்கண் திறந்தாலும், ஓரளவு அரிய காட்சிகளைக் காட்டிவிட்டு மூடிக் கொள்ளும். இதனால் பெருநிலைக்கேற முடியாதாம்.