Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.290.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தொன்பதாம் அதிகாரம்.
மனோவுருவகம்.

10.
எல்லாமாந் தெய்வ வியலுண்மை காணமனம்
எல்லா வுருவேற்கு மே.
290.

குறள் விளக்கம்.
தன் உண்மை தானறிய உலகில் யாவும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஆகையால், எவற்றிலும் விளங்கும் ஏகதேச சக்தித் தன்மை மனோ சக்தித் தன்மையொடு பொருந்தியே தோற்றும். எனவே, இம்மனம், எண்ணிலாத உருவகம் செய்யப்படத் தகுதி வாய்ந்துள்ளதாம்.
எல்லாவுருவேற்கும் ஏ, என்பதில் ஈற்றிலுள்ள ‘ஏ’ காரத்திற்கு பெருமை, உயர்ச்சி என்ற பொருள்கள் அமையும். அதாவது மனத்தின் பெருமை அல்லது உயர் சிறப்பு, எல்லா உருவகத்திற்கும் பொருத்தம் உடைத்து என்பதாம்.