Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.288.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

இருபத்தொன்பதாம் அதிகாரம்.

மனோவுருவகம்.


8. மதிச்சோதி மானு மறிமன மேற்கும்

பதிச்சோதி பார்க்கும் பகல்.

288.

குறள் விளக்கம்.

பதிச்சோதி பார்க்கும் பகல் = கடவுட் சோதியானது புறத்தே காண்கின்ற ஞாயிறு ஓன்று உள்ளதாம். அதன் ஒளியை ஏற்று வளர்வதும், தேய்வதுமாய் உள்ள திங்கள் போன்றதே நிலை பெறாத மனம். ஆகையால், சூரியனை (மெய்) அறிவாகவும், சந்திரனை அலை மனமாகவும் உருவகம் செய்தல் பொருத்தமே.

மானும் = ஒப்பாகும்.

மறி = ஆடு, மான், தடை, இடர்பாடு, இந்தப் பொருள்களுக்கு எல்லாம் மனத்தின் இயல் ஒத்தனவே.