Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.287.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தொன்பதாம் அதிகாரம்.
மனோவுருவகம்.

7.
காலுரு வஃதே கறங்கும் மனஞ்சுத்த
மாலுளங் கொண்டவனு மான்.
287.

குறள் விளக்கம்.
கால் உரு = காற்றின் வடிவம்.
கறங்கும் (சுழலும்) மனம் காற்றின் இயல்பு கொண்டதாம். சுழலாது, நினைப்பு மறப்பு அடையாது விளங்கும் மனமே சுத்த மனமாகும். இம்மனத்தின் உள்ளேதான் கடவுட் ஜோதி துலங்கும்.
காலுரு சுத்த மனம் மால் = தச வாயு அம்சமாகிய சுத்த ஆன்ம நிலை பெற்ற மனமே தச அவதாரங் கொள்ளும் திருமாலாக உரைக்கப்படும்.
இச்சுத்த மனம் அனுமன் ஆகவும், வாயுபுத்திரன் அவன் என்றும், திருமாலைத் தன் உள்ளத்தில் கொண்டோன் என்றும், கடவுளின் சிறிய திருவடி அவதார மென்றும் கூறுவர்.
இதனாலே கறங்கும் மனத்தை குரங்கா உருவகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டதாம்.