Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.285

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தொன்பதாம் அதிகாரம்.
மனோவுருவகம்.

5.
தாயின் தயவு தரித்தலாற் சூழ்மனம்
ஆயு மரும்பெணுரு வாம்.
285

குறள் விளக்கம்.
மனத்தின் அகத்தே கடவுள் சக்தியாம் தயவு மறைந்திருக்கின்றதால் தயாவுணர்வு உண்டாகும்போது அக்கடவுட் சக்தியே சிறிது வெளிப்படுகின்றதாம்.
தாய்க்குத் தன் சேயினிடத்து உண்டாகும் அன்பே உலகியலில் சிறந்த ஒன்றாகக் கூறப்படும். அத்தாய் அன்பினும் மிக்குடையது கடவுள் அன்பு. மெய்யறிவே கடவுள் உருவாயும், மெய்யன்பே கடவுள் சக்தியாயும் உள்ளதாம்.
அறிவு, ஞானம் இவைகளை ஆணாகவும், தயவு, இரக்கம்,அன்பு இவைகளைப் பெண்ணாகவும் கூறலாம். நமது மனம் உயர் தயவுக்கு உறைவிடமாக உள்ளதால், அரும் பெண்ணுருவாக புனைந்து உரைக்கப்பட்டது.