Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.284.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தொன்பதாம் அதிகாரம்.
மனோவுருவகம்.

4.
உருகா மனத்தின் உருகருந் தாதோ
கருங்கலோ வைரமதோ காண்.
284.

குறள் விளக்கம்.
இரக்கம் இல்லாத நெஞ்சத்தைக் கருந்தாது (இரும்பு) என்றோ, கருங்கல் என்றோ, மிகக் கடினமான வைரம் என்றோ உவமித்துக் கூறல் அகம் உணர்ந்த ஆன்றோர் வழக்கு.
மனம் புலன் உணர்ச்சி வசப்பட்டு ஓரளவு உருகும். பூரணமாக உருகி ஆவியாகிப் போவது கடவுட் கருணைச் சந்நிதியில்தான்.
இரும்பும், கல்லும், வைரமும் கூட அணுகுண்டிலிருந்து வெளிப்படும் சூட்டின் முன் உருகிப் போகக் காண்கிறோம் இன்று. ஆனால் மனித மனம் தான் உருகக் காணோம்.
பூரண அருள் என்று உறுமோ அன்றுதான் மனம் முற்றும் உருகி அருள் ஒளி வண்ணமாகி விளங்குவதாம்.