Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.282.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தொன்பதாம் அதிகாரம்.
மனோவுருவகம்.

2.
தெய்வமே தன்னுண்மை செம்புலஞ் சேர்மனமாய்
எய்துதலாற் றெய்வமென எண்.
282.

குறள் விளக்கம்.
செம்புலம் = மெய்ஞ்ஞானம். தயாபெருஞ் ஜோதிபதியே தன் மெய்ஞ்ஞான விளக்கத்தை நம் மனத்துள் பொதிந்து மறைத்து பிரிவற வைத்துள்ளார். பக்குவத்தாலே தெய்வச் செம்புலமே நம் மனமானதாய் கண்டு கொள்ளப்படுகின்றது. ஆதலின் மனத்தை தெய்வம் எனக் கூறுதல் ஒருவாறு உருவகமும் உருவகாதீத உண்மையுமாம்.
தெய்வம் என்பது தயவுத் தத்துவமானதும், தேயு (தீ) அம்சம் ஆனதும் ஆம். ஆகையால், தயாபெருஞ் ஜோதியை உண்மைத் தெய்வமாகக் கொள்ளல் சுத்த தயாநெறிக்கு உரிமையானதாம். மற்ற, புறத் தெய்வ வடிவங்கள் எல்லாம் கற்பனா உருவகத் தோற்றங்களேயாம்.