Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.280.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தெட்டாம் அதிகாரம்.
மனோ சக்தி.


10.
மாக்களிற் றாழ்த்துமது மக்க்ளின் மிக்குயர்த்தும்
ஆக்க மளிக்குமன மாம்.
280.

குறள் விளக்கம்.
மனம் எப்பேற்பட்ட சக்தியை வழங்கவல்லது எனில், புலனிச்சை மிக்கோரை விலங்குகளை விடத் தாழ்ந்து, புலனின்பத்தில் ஆழ்ந்திடச் செய்வதும், பொறிவாயில் ஐந்தவித்தாரை மக்களியே மிக உயர்ந்த தெய்வ நிலைக்கும் மேலான பேரின்ப நிலைக்கு உயர்த்தி வாழ்விப்பதும் ஆகும்.
மன ஆற்றல் காரியப்படாத மிருகங்கள் முதலியன, இயற்கை நியதியால் புலனுகர்ச்சி விஷயத்தில் ஓர் எல்லைக்குள் கட்டுப்பட்டு, உள்ளன.
ஆனால் மனோசக்தி பெற்ற இம் மனிதனோ, மிகுந்த புலனிச்சையால் சிற்றின்பத்தில் மூழ்கி, மிருகங்களை விடக் கேவலமாகப் போவதும், ஐம்புலன் அடக்கத்தால், அருள் துணை கொண்டு, சிறப்புற்ற பேரின்ப அனுபவ நிலை அடைவதும் சாத்தியம்.